'ஹெட் புஷ்' படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்

‘ஹெட் புஷ்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம் செய்ய படக்குழுவினர் ஒப்பு கொண்டுள்ளனர்.

Update: 2022-10-27 18:45 GMT

பெங்களூரு:

கன்னட நடிகர் டாலி தனஞ்ஜெயா நடிப்பில் 'ஹெட் புஷ்' என்ற திரைப்படம் கடந்த 21-ந் தேதி வெளியானது. இந்த படத்தில் பெங்களூரு தர்மராய சாமி கோவிலில் நடக்கும் கரக திருவிழாவை பற்றி சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 'ஹெட் புஷ்' படத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. மேலும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க கோரி சிலர் புகார் கடிதமும் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 'ஹெட் புஷ்' படக்குழுவினருடன், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க படக்குழு ஒப்புக்கொண்டது. மேலும் சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றதற்காக நடிகர் டாலி தனஞ்ஜெயாவும் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்