ஓட்டுநர்களிடம் அபராதம் என்ற பெயரில் வழிபறி செய்வதா?- போக்குவரத்து போலீஸ் அதிகாரியை எச்சரித்த காங்.பெண் எம்.எல்.ஏ.

ஓட்டுநர்களிடம் அபராதம் என்ற பெயரில் வழிபறி செய்வதா? என போக்குவரத்து போலீஸ் அதிகாரியை, காங்.பெண் எம்.எல்.ஏ. எச்சரித்துள்ளார்.

Update: 2022-07-26 21:30 GMT

பெலகாவி: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது, கார், சரக்கு ஆட்டோ டிரைவர்களிடம் வலுக்கட்டாயமாக அபராதம் வசூலித்து வருகிறார்கள். இதனால் சரக்கு ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுபற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி ஹெம்பால்கரின் கவனத்துக்கு சென்றது. இந்த நிலையில் அவர் நேற்று பெலகாவி போக்குவரத்து போலீஸ் அலுவலகத்துக்கு சென்று போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அப்பாவி ஓட்டுநர்களை மறித்து அபராதம் என்ற பெயரில் வழிபறியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால், போக்குவரத்து போலீஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்