எதிர்க்கட்சிகளுக்கு மூத்த சகோதரனாக காங்கிரஸ் செயல்பட வேண்டும் - மெகபூபா முப்தி சொல்கிறார்

நீதித்துறையோ, ஊடகமோ, நிர்வாகமோ எதுவாக இருந்தாலும், ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் அசைக்கப்படுகின்றன என்று மெகபூபா முப்தி கூறினார்.

Update: 2023-03-30 01:11 GMT

கோப்புப்படம் 

ஸ்ரீநகர்,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் எதிர்க்கட்சிகளுக்கு மூத்த சகோதரன் போல் நடந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளாக இருந்த மற்ற எதிர்க்கட்சிகளுக்கு, நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இடமளிக்க வேண்டும்.

தற்போதைய போராட்டம் ராகுல் காந்தியை லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்வது பற்றி மட்டுமல்ல, நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும். நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்கிறது.

நீதித்துறையோ, ஊடகமோ, நிர்வாகமோ எதுவாக இருந்தாலும், ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் அசைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார் 

Tags:    

மேலும் செய்திகள்