காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-25 04:30 GMT

சிவமொக்கா-

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் கடந்த 2019-ம் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தநிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சிவமொக்கா மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

அரசியல் பழிவாங்கும் நோக்கில் ராகுல்காந்தி எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலை. இவ்வாறு அவர்கள் கூறினர்.  மேலும் பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதையடுத்து சிவமொக்கா பி.எச். சாலை, சிவப்ப நாயக்கா சதுக்கத்தில் சாலை றியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்