தேசிய மாநாடு கட்சியுடனான கூட்டணியை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மெகபூபா முப்தி

தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சவுத்ரி முகமது அக்ரம், காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

Update: 2024-04-21 22:11 GMT

கோப்புப்படம்

கோக்கர்நாக்,

காஷ்மீரில் காங்கிரசுடன், தேசிய மாநாடு கட்சி இணைந்து போட்டியிடுகிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காஷ்மீரின் மற்றொரு கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சவுத்ரி முகமது அக்ரம், காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பா.ஜனதாவின் பி டீம் என அவர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த கட்சியுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரசை மக்கள் ஜனநாயக கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சவுத்ரி முகமது அக்ரமின் பேச்சை கேட்டபிறகும் அவரை காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரிப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. காங்கிரசை பா.ஜனதாவின் பி டீம் என அவர் அழைக்கிறார். ஆனாலும் தேசிய மாநாடு கட்சியை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அந்த கட்சியுடனான கூட்டணியை காங்கிரசார் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்