'காங்கிரஸ் ஊழல் கட்சி' - ஜே.பி.நட்டா கடும் தாக்கு

காங்கிரஸ் ஊழல், கமிஷன், குடும்ப அரசியல் செய்யும் கட்சி என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.

Update: 2024-03-05 14:58 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் பூத் மட்டத்திலான நிர்வாகிகள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசியதாவது:-

"பெங்களூரு விதான சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போரை பாரத தாய் மன்னிக்கவே மாட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.யின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஆதரவு எழுப்புகிறார்கள்.

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி இருந்தபோது, அமைதி நிலவியது. இப்போது கர்நாடகத்தில் குண்டு வெடிக்கிறது.பா.ஜனதா கொள்கை அடிப்படையிலான கட்சி. முஸ்லிம் பெண்களுக்கு அநீதி ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினோம். அதே போல் முத்தலாக் விவகாரத்து முறையை ஒழித்துள்ளோம்.

ஆனால் காங்கிரஸ் கட்சி மக்களை கவரும் அரசியல் செய்ததால் அதுகுறித்து யோசிக்கவில்லை. காங்கிரஸ் ஊழல், கமிஷன், குடும்ப அரசியல் செய்யும் கட்சி. பா.ஜனதா ஆட்சிக்கு பிறகு நமது நாட்டின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. தொலைநோக்கு பார்வையை வழங்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. தற்சார்பு உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது."

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்