டெல்லியில் காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம்

டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-12 13:50 GMT

புதுடெல்லி,

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை அக். 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் நவம்பர் 7, நவம்பர் 17 தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மிசோரத்தில் நவம்பர் 7-ஆம் தேதியும் மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25, தெலுங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம்  நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கொண்டனர். தொடர்ந்து அக். 17 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்