பெண்ணை தாக்கிய விவகாரம்: கர்நாடக மந்திரி மீது மகளிர் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
கர்நாடக மந்திரி சோமண்ணா ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பெங்களூரு,
கர்நாடக வீட்டுவசதித்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் சோமண்ணா. இவர் சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டலுபேட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது மந்திரி சோமண்ணா ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு மந்திரி சோமண்ணா மன்னிப்பும் கேட்டு இருந்தார்.
ஆனால் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பெண்ணை கன்னத்தில் அறைந்த மந்திரி சோமண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று பெங்களூரு நகர காங்கிரஸ் பிரசார குழுவினர் புகார் கடிதம் அளித்து உள்ளனர்.