கோலார் தங்கவயலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு

கோலார் தங்கவயலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோதிபாசு தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-18 18:45 GMT

கோலார் தங்கவயல்-

கோலார் தங்கவயல் ஜார்ஜ் மன்னர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை கட்சியின் கோலார் மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோதிபாசு தொடங்கி வைத்தார். இதில், தேசிய செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், கர்நாடக மாநில செயலாளர் சாத்தி சுந்தரேஷ், தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோலார் தங்கவயல் உரிகம் ரெயில் நிலையத்தில் இருந்து அம்பேத்கர் சாலை, சுராஜ்மெல் சர்க்கிள், காந்தி சர்க்கிள், பிரிட்சர்டு ரோடு, கீதா ரோடு வழியாக ஜார்ஜ் மன்னர் அரங்கிற்கு பேரணியாக வந்தனர்.

இந்த மாநாட்டில், தங்க சுரங்கப்பகுதியில் உள்ள வீடுகளை வசிப்பவர்களுக்கே சொந்தமாக்க வேண்டும், தங்க சுரங்க தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை ரூ.52 கோடியை உடனே வழங்க வேண்டும். பி.இ.எம்.எல். தொழிற்சாலையை தனியார் மாயமாக்க கூடாது. தங்கவயலில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். எரகோள் கூட்டு குடிநீர் திட்டத்தில் கோலார் தங்கவயல் நகரை சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்