டெல்லியில் கவர்னர்கள் மாநாடு: ஜனாதிபதி தலைமையில் நாளை மறுநாள் தொடக்கம்
மாநாட்டில் அனைத்து மாநில கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர்.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கவர்னர்கள் மாநாடு நடைபெற உள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நாளை மறுநாள் தொடங்கி இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர்.
திரவுபதி முர்மு ஜனாதிபதி ஆன பிறகு அவரது தலைமையில் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது தொடர்பாக கவர்னர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளது.