பள்ளி மாணவ-மாணவிகளின் பைகளில் காண்டம், கருத்தடை மாத்திரை;மதுபாட்டில்- ஆசிரியர்கள் அதிர்ச்சி

பெங்களூருவில் மாணவர்கள் செல்போன்களை வகுப்பறைகளுக்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கிடைத்த பொருட்கள் ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Update: 2022-11-30 10:30 GMT

பெங்களூரு

பெங்களூருவில் மாணவர்கள் வகுப்பறைக்குள் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதாகப் பல புகார்கள் வந்தன. கர்நாடகாவில் உள்ள ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மெண்ட்ஸ் (கேஏஎம்எஸ்) பள்ளிமாணவர்களின் பைகளை சோதனை செய்யுமாறு கோரிக்கை எழுந்தது.

இதை தொடர்ந்து மாணவர்கள் செல்போன்களை வகுப்பறைகளுக்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக சோதனை நடைபெற்றது. நகரின் பல பள்ளிகளில் திடீர் சோதனை செய்யப்பட்டது.

சோதனையின் போது செல்போன்கள் தவிர, 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்து ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் லைட்டர்கள், சிகரெட்டுகள் மற்றும் ஒயிட்னர்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சோதனை நடத்தப்பட்ட பள்ளிகளில் ஒன்றின் முதல்வர், 10-ம் வகுப்பு சிறுமியின் பையில் அதிகாரிகள் ஆணுறை இருந்ததை கண்டுபிடித்ததாக கூறினார். சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தனது நண்பர்களை குற்றம் சாட்டி உள்ளார்.

கிட்டத்தட்ட 80 சதவீத பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது. மாணவர் ஒருவரிடமிருந்து வாய்வழி கருத்தடை மாத்திரை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சில பள்ளிகள் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளை நடத்தியது. ஆசிரியர்கள் கூறியதை கேட்டு பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்

நிலைமையைகையாள, பள்ளிகள் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது ஆனால் யாரையும் சஸ்பெண்ட் செய்யவில்லை. கவுன்சிலிங்கிற்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

"நாங்கள் பள்ளிகளில் ஆலோசனை அமர்வுகள் இருந்தாலும், வெளியில் இருந்து குழந்தைகளுக்கு வேறு உதவியை நாடுமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொண்டோம், மேலும் 10 நாட்கள் வரை விடுப்பு வழங்கி உள்ளோம் என ஒரு பள்ளியின் முதல்வர் கூறினார்.

இதுகுறித்து கேஏஎம்எஸ் பொதுச் செயலாளர் டி.சசிகுமார் கூறுகையில், "ஒரு மாணவரின் பையில் வாய்வழி கருத்தடை மருந்துகள் (ஐ-பில்) இருந்தன. மேலும், தண்ணீர் பாட்டில்களில் மது இருந்தது.

கடந்த சில நாட்களாக, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்களை துன்புறுத்துவதையும், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், ஆபாசமான சைகைகளை செய்வதையும் அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு குழந்தைகளிடமும் இத்தகைய நடத்தை காணப்படுகிறது. இந்த அதிர்ச்சியை சமாளிக்க நாங்கள் போராடி வருகிறோம் என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்