தர்மஸ்தலா சவுஜன்யா கொலை வழக்கை கண்டித்து குடகில் கட்டிட தொழிலாளர் நல சங்கத்தினர் போராட்டம்

தர்மஸ்தலா சவுஜன்யா கொலை வழக்கை கண்டித்து குடகில் கட்டிட தொழிலாளர் நல சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-23 18:45 GMT

குடகு :-

தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுஜன்யா என்ற பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டாள். இந்த கொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் தொடர்புடையதாக ஒருவரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை சில மாதங்களுக்கு முன்பு, குற்றமற்றவர் என்று கூறி கோர்ட்டு விடுதலை செய்தது. இதனால் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் குடகில் இந்த கொலையை கண்டித்து நேற்று கட்டிட தொழிலாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் விராஜ்பேட்டையில் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

சவுஜன்யா கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் கைது ெசய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கொலையை கண்டித்து வருகிற 28-ந் தேதி பெல்தங்கடியில் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் கட்டிட தொழிலாளர்கள் நலசங்கத்தினர் கலந்து கொண்டு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறினர். இதற்கிடையில் இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து விராஜ்பேட்டை போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்