கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவு: முதல்-மந்திரியிடம் அறிக்கையை தாக்கல் செய்த குழு

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான குழு முதல்-மந்திரியிடம் அறிக்கையை சமர்பித்தனர்.;

Update:2024-02-29 16:33 IST

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த 2014ம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி சாதிவாரி சர்வே எடுக்கப்பட்டது. இந்த சர்வே கடந்த 2018ம் ஆண்டு முடிந்தது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான குழு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது சித்தராமையா ஆட்சியில் உள்ள நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை முற்றிலும் அறிவியல் பூர்வமானது என கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார். சுமார் 1 கோடியே 35 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 5.90 கோடி பேரிடம் தகவலகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் வயது, வருமானம், கல்வி உள்ளிட்ட 54 கேள்விகள் பற்றிய தகவல்கள் இந்த சர்வேவில் எடுக்கப்பட்டுள்ளது. 90 சதவீத மக்கள் இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்