சத்ரபதி சிவாஜியின் வீரம், நல்ல நிர்வாகம் நமக்கு ஊக்கமளிக்கிறது - பிரதமர் மோடி
பாசம், பணிவு, குருபக்தி, நட்பு, நேசம், வீரம், வாள் பயிற்சி, குதிரை ஏற்றம் என அனைத்திலும் சிவாஜி தலைசிறந்து விளங்கினார்.
புதுடெல்லி,
முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது.
இத்தகைய சிறப்புகளை பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 395-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளையொட்டி சத்ரபதி சிவாஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"சத்ரபதி சிவாஜி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவரது வீரமும், சிறப்பான நிர்வாகமும் நமக்கு ஊக்கமளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
சத்ரபதி சிவாஜி என்று அழைக்கப்படும் சிவாஜி ராஜே போன்ஸ்லே, முகலாயர் ஆட்சி காலமான 1627ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19-ம் தேதி புனேவில் உள்ள சிவநேரி கோட்டை என்ற இடத்தில் சஹாஜி ஜிஜாபாய் ஆகியோருக்கு இளைய மகனாக பிறந்தார். இளமையிலேயே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாச காவியங்களை கற்றறிந்து, சிறந்த வீரராகவும் திகழ்ந்தார்.