5 ஆண்டுகளில் 41 சதவிகிதம் உயர்ந்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு

Update:2024-04-21 09:53 IST

அமராவதி,

ஆந்திராவில் மே 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் சட்டசபை தேர்தலில் சித்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு ரூ.931.83 கோடி சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் பெயரில் ரூ.895.47 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பெயரில் ரூ.36.35 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து மதிப்பு 2019-ம் ஆண்டு இருந்ததை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளில் 41 சதவிகிதம் உயர்ந்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்புஆந்திராவின் இந்துப்பூர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக களம் இறங்கும் முன்னணி தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா குடும்பத்துக்கு ரூ.483 கோடி சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்