ஆந்திராவில் ஆட்சியை பிடித்த தெலுங்கு தேசம் கட்சி - கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ள நிலையில் இந்த வெற்றியை சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி கொண்டாடினார்.

Update: 2024-06-04 10:48 GMT

Image Courtesy: @ANI / @JaiTDP

அமராவதி,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

இந்த சூழலில் ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. மேலும் கூட்டணி இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்குதேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இந்த வெற்றியை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.




Tags:    

மேலும் செய்திகள்