விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட யூரியாவை பயன்படுத்தும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை - மத்திய அரசு அதிரடி!

விவசாயிகளின் பயன்பாட்டிற்காக யூரியாவைப் பயன்படுத்தும் தொழில்துறை அலகுகள் மீது நாடு தழுவிய ஒடுக்குமுறையை மத்திய அரசு எடுத்துள்ளது.

Update: 2022-07-12 14:20 GMT

புதுடெல்லி,

விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட யூரியாவைப் பயன்படுத்தும் தொழில்துறை ஆலைகள் மீது நாடு தழுவிய ஒடுக்குமுறையை மத்திய அரசு எடுத்துள்ளது.

யூரியா பதுக்கலை தடுக்க மத்திய ரசாயன உரத்துறை சிறப்பு பறக்கும் படையை அமைத்து கண்காணித்து வருகிறது. இது குறித்து மத்திய ரசாயன உரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

யூரியா பல நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளது. கள்ளச்சந்தையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுவதும், பதுக்கல் நடப்பதும் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. மத்திய ரசாயன உரத்துறை ரூ.63.43 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதை கண்டுபிடித்து, இதுவரை ரு.5.14 கோடி மீட்கப்படுள்ளது.

கணக்கில் வராத 2 ஆயிரம் மூட்டைகளில் ரூ.7.5 கோடி மதிப்பிலான யூரியா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக, கடந்த 30 ஏப்ரல், 2022இல் 8 மாநிலங்களில் உள்ள 38 மிக்சர் ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. 20 மே, 2022இல் 6 மாநிலங்களில் உள்ள 52 ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

740 மூட்டைகளில் ரூ.2022 கோடி மதிப்பிலான யூரியா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியதில் 70 சதவீதம் யூரியா மாதிரிகள் தரக்குறைவனக உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, 25 ஆலைகளின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த ஆலைகள் அரசு மானியத்தின் கீழ் யூரியா வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளால் ரூ.100 கோடி மதிப்பிலான சட்டவிரோத யூரியா விற்பனை கண்டறியப்பட்டது.

விவசாயிகளுக்காக அரசின் மானியத்தின் கீழ் வழங்கப்படும் 45 கிலோ யூரியா மூட்டை ஒன்றின் விலை ரூ.266 மட்டுமே. இதன்முலம், அரசுக்கு ரூ.3000 கோடி செலவாகிறது.

இந்நிலையில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக யூரியாவைப் பயன்படுத்தும் தொழில்துறை அலகுகள் மீது நாடு தழுவிய ஒடுக்குமுறையை மத்திய அரசு எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்