அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு சலுகை...!

சேவையிலுள்ள அக்னி வீரர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update:2022-06-15 18:59 IST

புதுடெல்லி,

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான 'அக்னிபத்' திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்து வைத்தாா். இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவும் ஒப்புதல் அளித்தது.

நாட்டின் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த திட்டம் குறித்து பல்வேறு நிபுணர்களும் தங்களது கருத்துகளையும் எச்சரிக்கை தகவல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ராணுவத்துக்கு செலவிடும் ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றின் செலவினத்தைக் குறைக்கும் வகையில், முப்படைகளுக்கு புதிய பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் பெண்கள் உள்பட 46,000 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த நிலையில், சேவையிலுள்ள அக்னி வீரர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேவையின்போது அக்னி வீரர்கள் பெறும் பயிற்சியை பட்டப்படிப்புக்கான மதிப்பீட்டாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் சேவைக்குப்பின் பிற துறைகளில் வேலைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்னி வீரர்களுக்கான கல்வித்திட்டத்தை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக வடிவமைத்துள்ளது. அக்னி வீரர்கள் பெறும் தொழில்நுட்பம்\ தொழில்நுட்பம் சாராத 50% திறன் பயிற்சி இளநிலை பட்ட மதிப்பீட்டாக கருதப்படும். எஞ்சிய 50% மொழி, பொது நிர்வாகம், வணிகவியல் போன்ற பாடங்களில் பெறும் பயிற்சியிலிருந்து மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்