பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Update: 2022-09-14 10:12 GMT

புதுடெல்லி,

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி அர்ஜூன் முண்டா கூறியுள்ளார். சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்