தமிழகத்துடனான காவிரி பிரச்சினை சீரடையும்: டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் நல்ல மழை பெய்வதால் தமிழகத்துடனான காவிரி பிரச்சினை சீரடையும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2024-07-17 21:46 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்துடனான காவிரி பிரச்சினை சீரடையும். தினமும் 1 டி.எம்.சி.க்கு (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) அதிகமாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஒரு தனியார் நிறுவனத்திற்கு குப்பை கழிவுகளை நிர்வகிக்க 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக நான் ரூ.15 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் மத்திய மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். குப்பை கிடங்குகள் அமைப்பதற்கான இடத்தை நாங்கள் தேடி வருகிறோம். இன்னும் டெண்டருக்கே அழைப்பு விடுக்கவில்லை.

வெளிவட்டச்சாலை, திடக்கழிவு மேலாண்மை, புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். நான் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. அனைவருடனும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவா் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்