தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு-இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு விசாரணையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.;

Update:2023-10-17 09:51 IST
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு-இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

டெல்லி, 

தன்பாலின ஈர்ப்பாளர்கள் உலகெங்கும் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இதன் பின்னர்  தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள்  தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. எனவே இந்த வழக்கிற்கான விசாரணை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பிற்கு எதிரானது என்று தொடர்ந்து கூறி வருகின்றது. மேலும் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டும் நடைபெறுவது என்று வாதிட்டது. 

இந்த வழக்கை இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5  பேர் கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்