பொது இடத்தில் கஞ்சா புகைத்தவர் கைது

புத்தூரில் பொது இடத்தில் கஞ்சா புகைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-14 18:45 GMT

 மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் டவுன் பகுதியில் தொழிலாளி ஒருவர் கஞ்சா புகைத்து, அந்த பகுதியில் உள்ள மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இடையூறு செய்து உள்ளார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் புத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் ெபாது மக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த தொழிலாளியை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அந்த பரிசோதனையில் அவர் கஞ்சா உட்கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் கபாகா கிராமத்தை சேர்ந்த பாரூக் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்