ஆன்லைன் விளையாட்டில் ரூ.65 லட்சத்தை இழந்த தொழில் அதிபர் தற்கொலை
கார்வார் அருகே ஆன்லைன் விளையாட்டில் ரூ.65 லட்சத்தை இழந்த தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
கார்வார்:
ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் தொழில் அதிபர்கள், வாலிபர்கள் உள்பட பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் கர்நாடகத்தை ேசர்ந்த ஒரு ெதாழில்அதிபரும் ஆன்லைன் விளையாட்டில் ரு.65 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது.
அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டம் சிர்சி தாலுகா குலவே கிராமம் அருகே விஜய் சாந்தராம ஹெக்டே (வயது 37). தொழில் அதிபரான இவர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவர் ஆன்லைன் விளையாட்டில் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வந்துள்ளார்.
இருப்பினும் அவர் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இதனால் அவர் ஒட்டுமொத்தமாக ரூ.65 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டில் பறிகொடுத்துள்ளார். இதன்காரணமாக அவர் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிர்சி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை போலீசார் மீட்டனர். மேலும் அவர் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், ஆன்லைன் விளையாட்டில் ரூ.65 லட்சத்தை இழந்துவிட்டதாகவும், இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் தொல்லையில் சிக்கி தவிப்பதாகவும், பணத்தை இழந்ததால் வாழபிடிக்காமல் நான் இந்த முடிவை தேடிக்கொள்கிறேன் என்று உருக்கமாக எழுதியிருந்தார்.
இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு சிர்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் விளையாட்டில் ரூ.65 லட்சத்தை இழந்த தொழில் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.