பி.யு.சி. 2-ம் ஆண்டு தேர்ச்சி சான்றிதழுக்கு 4 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு
பி.யு.சி. 2-ம் ஆண்டு தேர்ச்சி சான்றிதழுக்கு 4 லட்சம் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.;
பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பி.யு.சி. 2-ம் ஆண்டு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 6.7 லட்சம் பேர் எழுதினர். ஜூன் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, இதற்கான துணை தேர்வு நடைபெற்று, அதன் முடிவுகள் ஜூலை 31-ந் தேதி வெளியானது.
தற்போது 4.20 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில் அந்த மாணவர்களுக்கு தேர்சி சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என அவர்களது பெற்றோர் கூறுகின்றனர். இதுதொடர்பாக பி.யு.கல்லூரி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.