ஆயுதங்களால் தாக்கி சகோதரர் கொலை

மனைவியுடன் கள்ளத்தொடர்பு என்ற சந்தேகத்தில் சகோதரரை ஆயுதத்தால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசில் சரண் அடைந்துள்ளார்.

Update: 2022-12-04 21:11 GMT

பெலகாவி:-

மனைவியுடன்...

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவை சேர்ந்தவர் அக்பர் சேக். இவரது சகோதரர் அஸ்மத் சேக். அஸ்மத்திற்கு திருமணம் முடிந்து, அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அக்பர் நடவடிக்கையில் அவரது சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருக்கும், தனது மனைவிக்கும் கள்ளத்தொடர்ப்பு இருப்பதாக அவர் சந்தேகப்பட்டார்.

ஆனால் இதுகுறித்து அவர் தனது மனைவி மற்றும் சகோதரரிடம் கேட்கவில்லை. எனினும் இதனால் ஆத்திரமடைந்த அஸ்மத் சேக், தனது சகோதரரை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த நிலையில் அக்பர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அவரை தனது காரில் அஸ்மத் சேக் பின் தொடர்ந்து சென்றுள்ளார். கப்பூர்-சிக்கோடி சாலையில் அவர் சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த அஸ்மத் சேக் அவரை காரில் இருந்தபடி தள்ளிவிட்டார்.

வழக்குப்பதிவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த அக்பரை அவரது சகோதரர் ஆயுதங்களால் கடுமையாக தாக்கினார். இதில் அக்பர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே அஸ்மத் சேக் போலீசில் சரண் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து சிக்கோடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்