டெல்லி-விசாகப்பட்டினம் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி-விசாகப்பட்டினம் விமானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2024-09-04 04:30 IST

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் உடனடியாக விசாகப்பட்டினம் விமான நிலைய அதிகாரிகளிடம் தகவலை கூறி எச்சரிக்கை செய்தனர்.

டெல்லியில் இருந்து சென்ற விமானத்தில் 107 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், அனைத்து பயணிகளையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை தீவிரமாக சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்