பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடக்கம்; பிரதமர் மோடி பங்கேற்பு

பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2022-06-21 14:47 GMT

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேவேளை, ஆளும் பாஜக இதுவரை தங்கள் குடியரசு தலைவர் வேட்பாளர் யார்? என்பது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்நிலையில், பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி உள்பட பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பாஜக ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது? உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்