பா.ஜனதா தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப்படும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

பா.ஜனதா தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2023-04-10 18:45 GMT

பெங்களூரு:

வாக்குறுதிகள்

கர்நாடக பா.ஜனதா தேர்தல் அறிக்கை குழு தலைவரான சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று பெங்களூருவில் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். அது வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் அவற்றை 5 ஆண்டுகளில் அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம். அமல்படுத்த வாய்ப்பு இருக்க கூடிய வாக்குறுதிகளை மட்டுமே நாங்கள் கூறுவோம். பெங்களூரு, மைசூரு மண்டலம், வட கர்நாடகம், கடலோர கர்நாடகம் மற்றும் மாவட்டங்களுக்கு தனித்தனியாக தேர்தல் அறிக்கை வழங்க வாய்ப்புள்ளது.

தேர்தல் அறிக்கை

இந்த தேர்தல் அறிக்கை குழுவில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் 32 பேர் உள்ளனர். அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு தேர்தல் வாக்குறுதிகள் முடிவு செய்யப்படுகின்றன. நாங்கள் தயாரிக்கும் இந்த அறிக்கை நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்க போகிறது.

இதில் புதிய திட்டங்கள், ஏழை மக்களுக்கு வாழ்க்கையை கட்டமைத்து கொடுக்கும் வகையிலான வாக்குறுதிகள் இடம் பெறும். 5 ஆண்டுகளில் செயல்படுத்த கூடிய வாக்குறுதிகளை மட்டுமே நாங்கள் வழங்குவோம். அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்