பி.எப்.ஐ. மீதான வழக்குகளை வாபஸ் பெற்றேனா?; பொய் பேசுவதே பா.ஜனதாவின் தொழில் - சித்தராமையா குற்றச்சாட்டு

பொய் பேசுவதே பா.ஜனதாவின் தொழில் என்று சித்தராமையா குற்றச்சாட்டி உள்ளார்.

Update: 2022-09-30 18:45 GMT

பெங்களூரு:

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பி.எப்.ஐ. அமைப்பு வளர நான் காரணம் என்று பா.ஜனதா சொல்கிறது. அந்த அமைப்பினர் மீது இருந்த வழக்குகள் பா.ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பொய்யை குலதெய்வமாக கொண்டு செயல்படுகின்றன. பொய் பேசுவதே அவர்களின் தொழில். எனது ஆட்சியில் அந்த அமைப்பு நிர்வாகிகள் மீது இருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து விவரங்கள் கேட்டு பா.ஜனதா அரசுக்கு 4 முறை கடிதம் எழுதியுள்ளேன். அரசு வழங்கிய பதில் கடிதத்தில், காங்கிரஸ் ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பினர் மீது இருந்த வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, தொழிலாளர்கள், கன்னட அமைப்பினர், விவசாயிகள் மீது இருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. பா.ஜனதாவுக்கும், எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எப்.ஐ. அமைப்புடன் ரகசிய தொடர்பு உள்ளதா?. தேர்தல் அந்த அமைப்புகள் பா.ஜனதாவுக்கு எப்படி உதவின என்பது குறித்து ஐகோா்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்