ராஜஸ்தானில் சட்டசபை முற்றுகை முயற்சி: பா.ஜ.க.வினர் போலீசாருடன் மோதல்

ராஜஸ்தானில் சட்டசபை முற்றுகை முயற்சியில் ஈடுபட்டதால், பா.ஜ.க.வினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-20 22:06 GMT

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் கால்நடைகளுக்கு ஒருவித தோல் நோய் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறியதாக கூறி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க.வினர் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர்.

போராட்ட குழுவினர் நேற்று காலையில் தங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டசபையை நோக்கி வந்தனர். அவர்களை பைஸ் குடோன் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்ட குழுவினர் போலீசாரின் தடுப்புகளை மீறி சட்டசபையை நோக்கி முன்னேற முயற்சித்தனர்.

இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலானது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் மாநில பா.ஜ.க. தலைவர் சதீஷ் பூனியா மற்றும் மூத்த தலைவர் அருண் சதுர்வேதி உள்ளிட்டோர் லேசான காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். "மாநில அரசு நோயை தடுக்க தவறிவிட்டு, மத்திய அரசை தொற்றுநோயாக அறிவிக்க வலியுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்" என்று பா.ஜ.க. தலைவர் பூனியா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்