'மோடியை தேர்ந்தெடுங்கள்' என்ற கருப்பொருளில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாஜக

பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், பயனடைந்த மக்கள் குறித்த காட்சிகள் வீடியோவில், இடம்பெற்றுள்ளன.

Update: 2024-01-25 07:15 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, தேர்தல் பிரசாரத்தை  தொடங்கியுள்ளது. 'மோடியை தேர்ந்தெடுங்கள்' என்ற கருப்பொருளில் வீடியோ வெளியிட்டு பாஜக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

சந்திரயான் 3, ராமர் கோவில், நலத்திட்டங்கள் போன்றவற்றை குறிப்பிட்டு வீடியோ மூலம் பாஜக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், பயனடைந்த மக்கள் குறித்த காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. 

 

Tags:    

மேலும் செய்திகள்