மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல்: 11 நகராட்சிகளில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை

மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் 11 நகராட்சிகளில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைத்தது. காங்கிரஸ் 8 நகராட்சிகளை கைப்பற்றியது.

Update: 2023-01-24 20:42 GMT

Image Courtacy: ANI

போபால்,

மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 5 மாவட்டங்களில் 19 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன.

மொத்தம் 343 கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், பா.ஜனதாவுக்கு 183 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 143 கவுன்சிலர்களும் கிடைத்தனர். மீதி இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

இந்த கவுன்சிலர்கள் பதவி அடிப்படையில், பா.ஜனதா 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், காங்கிரஸ் கட்சி 8 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பெரும்பான்மை பெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்