'தோல்விகளை மறைக்க பா.ஜ.க. உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளை கையில் எடுக்கிறது' - மல்லிகார்ஜுன கார்கே

பா.ஜ.க.வின் பொய்களுக்கு மக்கள் முன்னிலையில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தினார்.

Update: 2024-01-04 12:07 GMT

புதுடெல்லி,

2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது;-

"உங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை அகற்றிவிட்டு, கட்சியின் வெற்றியை உறுதி செய்ய குழுவாக செயல்படுங்கள். கட்சியின் உள் விவகாரங்களை ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம்.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பா.ஜ.க. உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளை கையில் எடுக்கிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சியை வேண்டுமென்றே தொடர்புபடுத்துகிறார்கள். பா.ஜ.க.வின் பொய், வஞ்சகம் மற்றும் தவறான செயல்களுக்கு மக்கள் முன்னிலையில் நாம் ஒன்றுபட்டு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்."

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்