உரிமை மீறல் பிரச்சினை:ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் பா.ஜனதா எம்.பி. வலியுறுத்தல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் பேசினார்.;

Update:2023-03-11 03:15 IST

புதுடெல்லி, 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் பேசினார். அவரது உரைக்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே உரிமை மீறல் பிரச்சினை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக மக்களவையின் உரிமை மீறல் குழு விசாரணை நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ராகுல்காந்தியின் உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும், அது அவரது மற்றும் காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனல்களில் உள்ளது. அவர் மீது ஒரு முறையல்ல, 3 முறை உரிமை மீறல் பிரச்சினை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து உரிமை மீறலில் ஈடுபடும் அவரது எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்தார்.

மேலும் தனது கருத்துகளுக்கு ஆதரவாக ஆவணங்களையும் குழு முன்பு தாக்கல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்