பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது...!
டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது.
புதுடெல்லி,
கர்நாடக சட்டசபை தேர்தல் 2023 க்கான பாஜக மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூட்டம் டெல்லியில் அக்கட்சி தலைமையகத்தில் தொடங்கியது. கர்நாடக பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் 2023க்கான மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா,பாதுகாப்பு மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.