உயிரி தொழில்நுட்ப கண்காட்சி : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

இந்த கண்காட்சி ஜூன் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது .

Update: 2022-06-09 02:50 GMT

Image Courtesy : ANI 

டெல்லி,

டெல்லியில், 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைக்கிறார்.அதன் பிறகு பிரதமர் உரையாற்றுவார் என கூறப்படுகிறது .இந்த கண்காட்சி ஜூன் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது .

தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரை இணைக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் இதில் 300 க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. சுகாதாரக் கவனிப்பு, மரபணு தொழில்நுட்பம், உயிரி மருந்து, தொழில்துறை உயிரி தொழில்நுட்பம், போன்ற பல்வேறு துறைகளில் உயிரி தொழில்நுட்ப பயன்பாட்டை விளக்குவதாக இந்தக் கண்காட்சி இருக்கும்  என கூறப்படுகிறது .

Tags:    

மேலும் செய்திகள்