பீகார்: பள்ளியில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தால் மாணவர்கள் பாதிப்பு - 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

பூச்சிக்கொல்லி மருந்தால் மாணவர்கள் சிலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-01-13 14:44 IST

Image Courtesy : ANI

பாட்னா,

பீகாரின் முங்கர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் சிலருக்கு திடீரென மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்ட 18 மாணவர்களை உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்த தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பள்ளி வளாகத்தில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டதாகவும், இதனால் மாணவர்கள் சிலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்