சமூகத்தில் பரப்பப்படும் அச்சம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிரானது ஒற்றுமை பயணம்: ராகுல் காந்தி
சமூகத்தில் பரப்பப்படும் அச்சம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிரானது இந்திய ஒற்றுமைப்பயணம் என்று ராகுல் காந்தி கூறினார்.
குருஷேத்ரா,
ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் அரியானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஜோடோ யாத்திரைக்கு இடையே ராகுல் காந்தி கூறியதாவது:-
பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாட்டில் பரப்பப்படும் அச்சம், வெறுப்புணர்வுக்கு எதிராக இந்த யாத்திரை நடைபெறுகிறது. விவசாயிகள் கவலையில் உள்ளனர். எரிபொருள் மற்றும் உரவிலை அவர்களை நேரடியாக பாதித்துள்ளது. மத்திய அரசு திரும்ப பெற்ற விவசாய சட்டம் விவசாயிகளுக்கானது இல்லை. அவை விவசாயிகளை தாக்கும் ஆயுதமாக இருந்தது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவை சிறு வர்த்தகர்களை நேரடியாக பாதித்தது" என்றார்.