மின்கட்டணம் செலுத்துவதில் சிக்கல்: பெஸ்காமில் தொழில்நுட்ப கோளாறு சரியாகி விட்டது - அதிகாரி தகவல்

மின்கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் பெஸ்காமில் தொழில்நுட்ப கோளாறு சரியாகி விட்டது என்று அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-11-11 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு மின்சார வாரியம் (பெஸ்காம்) சார்பில் மாதம் ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடப்பட்டு வருகிறது. மேலும் பெஸ்காம் சார்பில் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தவும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மக்களால் செலுத்த முடியாமல் போனது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக மக்கள் 1912 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

இதுகுறித்து பெஸ்காம் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெஸ்காமில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. தொழில்நுட்ப கோளாறு குறித்து எங்கள் கவனத்துக்கு வந்தவுடன் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. மக்கள் இனி ஆன்லைனில் சிக்கலின்றி மின் கட்டணத்தை செலுத்தலாம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்