பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்வேன் - லாலு பிரசாத் யாதவ்

பெங்களூருவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இருப்பதாக பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-06 19:48 GMT

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

இதற்காக கடந்த மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் வருகிற 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இருப்பதாக பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாட்னா விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த லாலு பிரசாத், "எனது வழக்கமான மருத்துவ பரிசோதனை, ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்காக டெல்லி செல்கிறேன். அதை முடித்து பாட்னா திரும்பிய பிறகு எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூருக்கு செல்வேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் இருந்து மோடி அரசை அகற்றுவதற்கான களத்தைத் தயார்படுத்துவேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்