தனக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி

மேற்கு வங்காளத்தில் தனக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை குழந்தைகள் நலத்துறை அவசர எண்ணுக்கு தொடர்புகொண்டு சிறுமி தடுத்து நிறுத்தினாள்.

Update: 2022-10-24 21:05 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டம் காசிப்பூர் கிராமத்தை சேர்ந்தவள் பூர்ணிமா லோகர்(வயது 15, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவள் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமத்தில் நடந்த குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பூர்ணிமா கலந்துகொண்டாள்.

இந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக பூர்ணிமாவுக்கு அவளது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் தான் படிக்க விரும்புவதாக பூர்ணிமா கூறியும் பெற்றோர் செவிசாய்க்கவில்லை.

இதையடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது கூறப்பட்ட குழந்தைகள் நலத்துறை அவசர எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசிய பூர்ணிமா தனக்கு குழந்தை திருமணம் நடக்க உள்ளது பற்றி கூறினார். உடனடியாக காசிப்பூர் கிராமத்திற்கு சென்ற குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பூர்ணிமாவின் பெற்றோரிடம் குழந்தை திருமணத்தால் நடக்கும் பிரச்சினை குறித்து கூறினர்.

இதையடுத்து பூர்ணிமாவுக்கு குழந்தை திருமணம் செய்யும் முடிவை பெற்றோர் கைவிட்டனர். இதுகுறித்து பூர்ணிமா கூறுகையில், கொரோனாவால் எனது தந்தைக்கு வேலை பறிபோனது. இதனால் குடும்ப வறுமை காரணமாக எனக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க பெற்றோர் நினைத்தனர். ஆனால் எனக்கு நன்றாக படித்து செவிலியராக பணியாற்ற வேண்டும் என்று ஆசை உள்ளது என்றாள்.

Tags:    

மேலும் செய்திகள்