ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை: பிசிசிஐ வெளியீடு

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Update: 2022-08-03 15:44 GMT

புதுடெல்லி,

டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. அதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவுக்கு சென்று ஆகஸ்ட் பிற்பாதியில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவிட்டு இந்திய அணி நாடு திரும்புகிறது .

அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 11ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்தியாவிற்கு வந்து இந்த தொடர்களில் ஆடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடர்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 டி20 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா ஆடுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர்:

முதல் டி20 - செப்டம்பர் 20ஆம் தேதி - மொஹாலி

2வது டி20 - செப்டம்பர் 23ஆம் தேதி - நாக்பூர்

3வது டி20 - செப்டம்பர் 25ஆம் தேதி - ஐதராபாத்

இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடர்:

முதல் டி20 - செப்டம்பர் 28ஆம் தேதி - திருவனந்தபுரம்

2வது டி20 - அக்டோபர் 2ஆம் தேதி - கவுகாத்தி

3வது டி20 - அக்டோபர் 4ஆம் தேதி - இந்தூர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்:

முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 6ஆம் தேதி - லக்னோ

2வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 9ஆம் தேதி - ராஞ்சி

3வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 11ஆம் தேதி - டெல்லி.





Tags:    

மேலும் செய்திகள்