சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கடிதம்
சிறுபான்மையினரின் சமூக, அரசியல், பொருளாதார நிலை தற்போது பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
நாட்டில் பொதுமக்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் ஆடம்பரம் என்றாகிவிட்டன என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாவது:-
இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு பல்வேறு அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த அடிப்படை உரிமைகள் தற்போது ஆடம்பரம் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. . அரசியல், சமூகம், மதம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப செயல்படுபவர்களுக்கு மட்டுமே இந்த அடிப்படை உரிமைகள் கிடைக்கின்றன.
சிறுபான்மையினரின் சமூக, அரசியல், பொருளாதார நிலை தற்போது பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.