போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நலம் விசாரித்த பசவராஜ் பொம்மை

போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து உடல் நலத்தை விசாரித்தார்.

Update: 2022-10-10 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக-மராட்டிய எல்லையில் கஞ்சா போதைப்பொருள் கடத்தல்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளான கலபுரகி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் இள்லால் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் அவரை போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று அந்த தனியார் மருத்துவமனைக்கு நேரில் வந்து, சிகிச்சை பெற்று வரும் இன்ஸ்பெக்டரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்