காவி வண்ணத்தை கண்டு காங்கிரஸ் பயப்படுவது ஏன்? பசவராஜ் பொம்மை கேள்வி

கர்நாடகத்தில் பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-14 14:10 GMT

பெங்களூரு,

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவா் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. எல்லாவற்றிலும் அரசியல் செய்வது காங்கிரசின் வாடிக்கை. காவி வண்ணம் நமது நாட்டின் தேசிய கொடியிலேயே உள்ளது. காவியை கண்டால் காங்கிரசுக்கு கோபம் வருவது ஏன்?. சுவாமி விவேகானந்தா பெயரிலேயே பள்ளி கட்டிடங்களை நாங்கள் அமைக்கிறோம்.

அவர் சன்னியாசியாக இருந்தவர். அவர் உடுத்தி இருந்தது காவி வண்ண ஆடை ஆகும். விவேக என்றால் அனைவருக்கும் அறிவு என்று பொருள். காங்கிரசார் அதை கற்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்