அயோத்தி ரெயில் நிலையம் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ளது : ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

அயோத்தி ரெயில் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.

Update: 2023-12-29 17:19 GMT

லக்னோ,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் (ஜனவரி)  22-ம் தேதி பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதற்கிடையே, புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தில் ஷாப்பிங் மால்கள், காபி ஷாப்கள், புத்துணர்வூட்டும் வசதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், அயோத்தி ரெயில் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த  அஸ்வினி வைஷ்ணவ், அயோத்தி ரெயில்  நிலையம் உலகத்தரத்தில் கட்டப்பட்டு உள்ளது. என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்