சிறந்த சேவைக்காக 15 செவிலியர்களுக்கு விருது - ஜனாதிபதி வழங்கினார்

சிறந்த சேவை ஆற்றிய 15 செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.

Update: 2024-09-11 15:20 GMT

புதுடெல்லி,

கடந்த 1973-ம் ஆண்டு முதல் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில், சமூகத்திற்கு சிறந்த சேவை ஆற்றிய செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக 'தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது' வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த 2024-ம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 15 செவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், 15 செவிலியர்களுக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த விழாவில் பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, செவிலியர்கள் சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் என்றும், இந்த விருதுகள் அவர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் கூறினார். தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெறும் ஒவ்வொரு செவிலியருக்கும் ஒரு தகுதிச் சான்றிதழ், ரூ.1,00,000 ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்