மணீஷ் சிசோடியா மீது ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கு: அசாம் முதல்-மந்திரியின் மனைவி தொடர்ந்தார்

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக கவுகாத்தி ஐகோர்ட்டில் ரினிகி புயன் சர்மா, ரூ.100 கோடி இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2022-06-23 00:06 GMT

கவுகாத்தி, 

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கடந்த 4-ந் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம், கொரோனா முழு கவச உடைகள் வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மாவுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அசாம் மாநில அரசு அளித்ததாக கூறினார்.

இதற்கு ஹிமந்த பிஸ்வா சர்மா மறுப்பு தெரிவித்தார். இந்தநிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக கவுகாத்தி ஐகோர்ட்டில் ரினிகி புயன் சர்மா, ரூ.100 கோடி இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், முழு கவச உடை ஒப்பந்தம் தனக்கு அளிக்கப்படவில்லை என்றும், 1,485 கவச உடைகளை நன்கொடையாக தான் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்