வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்னுடையது அல்ல; அர்பிதா முகர்ஜி சொல்கிறார்
ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் இருவரையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடிக்கு மேற்பட்ட ரொக்கமும், இன்னொரு வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டன. ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் சிக்கின.
அமலாக்க துறையின் காவலில் இருக்கும் அர்பிதா முகர்ஜி, தன்னுடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் எதுவும் தனக்கு சொந்தமானது இல்லை என்று கூறியுள்ளர். மேலும் தனக்கு தெரியாமலே இந்த பணத்தை வீட்டில் வைத்துவிட்டதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணையின் போது அர்பிதா முகர்ஜி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.