திருப்பதி மலையில் பயங்கரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை
நள்ளிரவில் திடீரென நடைபெற்ற ஒத்திகையால் பக்தர்கள் குழப்பமடைந்தனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருப்பதியில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் திருப்பதியில் நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் ஏழுமலையான் கோவில் முன்பு பயங்கரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் ஆந்திர மாநில ஆக்டோபஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் இந்த ஒத்திகை நிகழ்வில் பங்கேற்றனர். திடீரென நடந்த ஒத்திகையால் பக்தர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.